நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்த வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியான ஆவணம் கைகாட்டியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறதா எனப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.
இதனையடுத்து, ஆலங்குடியில் உள்ள வேளாண்மைக் கிட்டங்கிற்குச் சென்ற அவர், அங்கு அடுக்கிவைத்திருந்த பல்வேறு வகையான தானிய வகைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, விவசாயிகள் கொண்டுவரும் தானியங்களை அலுவலர்கள் முறையாக பரிசோதனை செய்கிறார்களா? என ஆய்வுசெய்தார்.
இதையும் பார்க்க: மேற்கு வங்க கட்டட தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை!