புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முதன்மை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 1,250 பேர் வீட்டுக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 654 பேருக்கு பரிசோதனைசெய்யப்பட்டு அதில் 350 பேருக்கு கரோனா இல்லாதது உறுதியாகியுள்ளது.
மீதி இருப்பவர்களுக்கு பரிசோதனை முடிவு விரைவில் வந்துவிடும். 144 தடையை மீறி வாகனத்தில் செல்பவர்களுக்குக் கண்டிப்பாக நீதிமன்றம் வாயிலாகத்தான் இருசக்கர வாகனம் திருப்பி அளிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: டெலிவரி பாய்க்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்!