புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே ஆறு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.