புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கன்னியான் கொல்லை பகுதியில் ஒரு சமூகத்தினர் சாலையில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகேயுள்ள வானக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் அந்த வேகத்தடையை உடைத்துள்ளனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் கம்பு, கட்டையால் கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த மூவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வடகாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.