புதுக்கோட்டை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளாவிலிருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் சுவர்கள், சாலையோர சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
![Pudukkottai wall arts getting ruined](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4837141_pp.jpg)
ஓவியங்கள் வரையப்பட்டது முதல் சில நாட்கள் முன்புவரை சீராகப் பராமரிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது சினிமா விளம்பரங்கள், போஸ்டர்கள் ஓவியங்கள் வரையப்பட்ட சுவர்கள் மீது ஒட்டப்பட்டும், வரையப்பட்டும் பாழாகிவருகின்றன. புதுக்கோட்டைக்கு அழகு சேர்க்கும் விதமாக இருந்த இந்த ஓவியங்களின்மீது, ரசிகர்கள் என்ற பெயரில் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படங்களின் விளம்பரத்தை எழுதியும், பலவிதமான போஸ்டர்களை ஒட்டியும் சிதைத்து வருகின்றனர்.
![Pudukkottai wall arts getting ruined](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4837141_pp-2.jpg)
புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி, சுவர்களின்மீது வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அழியும்விதமாக இப்படி விளம்பரங்கள்செய்ய அனுமதி அளித்திருப்பது அம்மாவட்ட மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த ஓவியங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: