புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை மீன் ஏற்றி வந்த மினி டெம்போ அவ்வழியாகச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீமிசல் காவல் ஆய்வாளர் பாஸ்கரனுடன் மற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மினி டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். அதையடுத்து சுப்பிரமணியன் உடல் உடற்கூறாய்விற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.