புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நிலையப்பட்டி அன்னபூரணி அம்மன் கோயில் வளாகத்தில் வேப்பமரம் மரத்திலிருந்து பால் வழிந்தோடியது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
மேலும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வேப்ப மரத்தில் அம்மன் இருப்பதாகவும், அதனால் பால் வடிவதாகவும் பேசிக்கொண்டனர். இதையடுத்து அந்த மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மரத்தின் அருகே கோலமிட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் இதனை பார்க்க அப்பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'கொரோனாவால் வந்த கொடுமை' - நெசவாளர்களின் குமுறல்