ETV Bharat / state

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டணையுடன் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை!
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை!
author img

By

Published : Feb 8, 2023, 10:19 AM IST

Updated : Feb 8, 2023, 12:10 PM IST

புதுக்கோட்டை: கறம்பக்குடி தாலுகா சூரக்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் மோகன் (44). இவர் அதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி (34) என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனால் மகாலட்சுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மோகனிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக கடந்த 2019 ஜனவரி 31 அன்று இரவு 9 மணிக்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், மகாலட்சுமியை கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எனவே இது தொடர்பாக கறம்பக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை முழுவதுமாக நிறைவு பெற்றது. இந்த நிலையில் நீதிபதி சத்யா, “குற்றம் சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி - தேனியில் பரபரப்பு

Last Updated : Feb 8, 2023, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.