ETV Bharat / state

ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்! - 108 Ambulance

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

iluppur
author img

By

Published : May 31, 2019, 10:07 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேம்பனூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கருப்பாயி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால், 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் கருப்பாயியை ஏற்றிக்கொண்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது. ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே பிரசவ வலியால் கருப்பாயி துடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்சிலேயே அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர சிகிச்சை நிபுணர் பரமசிவம், பைலட் கணேசமூர்த்தி ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.

இதையடுத்து தாயும்-சேயும், இலுப்பூர் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்பு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது-

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

இலுப்பூர் அருகே  உள்ள வேம்பனூரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி கருப்பாயி (வயது-26) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் 108  ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  108 ஆம்புலன்ஸ் கருப்பாயியை ஏற்றிக்கொண்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது.
ஆனால் அவரை கொண்டு செல்லும் வழியிலேயே பிரசவவலியால் கருப்பாயி துடித்துள்ளார். 
பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்சிலேயே  ஆண்குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர சிகிச்சை நுட்புணர் பரமசிவம், பைலட் கணேசமூர்த்தி ஆகியோர் பிரசவம் பார்த்தனர். 
இதையடுத்து தாயும் சேயும் இலுப்பூர் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்பு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாய்யும் சேய்யும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
ஆம்புலன்சிலேயே ஆண்குழந்தை பிறந்ததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பிரசவம் பார்த்து தாயையும் சேய்யையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களை பாராட்டினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.