புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் பராமரிப்பு காரணமாக, நாளை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட மின்சார வாரியம் வெளியிட்ட தகவலில், '110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், சார்லஸ் நகர், சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம், எஸ்.பி. அலுவலகம், கம்பன்நகர் தெற்கு பகுதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ்நகர், ஆண்டவர் நகர், ஆர்.எம்.வீ. நகர், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, காந்திநகர், அய்யனார்புரம், கேஎல்கேஎஸ் நகர், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன் காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர், ஈவிஆர் நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர், சேங்கைதோப்பு, மருப்பிணி ரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் நாளை 21.10.2023 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல் புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை ( திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு) ஆகிய பகுதிகளில் நாளை 21.10.2023 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 வரை மின் விநியோகம் இருக்காது' எனவும் இந்த மின் தடைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு, தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 'கீரனூர் உபகோட்டத்திற்குட்பட்ட குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உலங்கத்தான்பட்டி, உடையாளிப்பட்டி, ராக்கத்தான்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை 21.10.2023 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 5.00 வரை மின் விநியோகம் இருக்காது' என கீரனூர் உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும்,தொண்டைமான் நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னதிரையன்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை 21.10.2023 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 5.00 வரை மின் விநியோகம் இருக்காது' என மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!