தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், கப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் கடைகளில் பதுக்கி வைத்து நெகிழி பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன் உத்தரவின் பேரில் இன்று காலையிலிருந்து புதுக்கோட்டை சாந்தநாதபுரம், கீழராஜ வீதி, பூ சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடைகாரர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து, கடைகளில் இருந்த 300 கிலோ அளவிலான நெகிழி பைகளை பறிமுதல் செய்தனர். ஒரு சில இடங்களில் நகராட்சி அலுவலர்களிடம் கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்க: 'நெகிழிகளுக்கு மாற்று சணல்' - அட்டகாசமான கண்காட்சி