புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபகாலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுவதால் காவல்துறை கண்காணிப்பில் இருந்த பழைய குற்றவாளிகள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் 200க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அழைத்துப் பேசினார்.
அப்போது, குற்றவாளிகள் திருந்துவதற்கு தான் ஒரு வாய்ப்பு அளிப்பதாகவும், தொடர்ந்து குற்றங்கள் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். பொய் வழக்குகள் போடமாட்டோம் என அவர்களுக்கு உறுதியளித்த அவர், குற்றச் சம்பங்களில் இனி ஈடுபடமாட்டோம் என ஒவ்வொருவரும் எழுதித்தர வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு