புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,40,463; பெண் வாக்காளர்கள் 6,48,493; இதர வாக்காளர்கள் 42 ஆக மொத்தம் 12,88,998 வாக்காளர்கள் உள்ளனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊரக பகுதித் தேர்தலில் 590 பதவியிடங்கள் ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கும், 316 பதவியிடங்கள் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கும், 1,820 பதவியிடங்கள் பொது பெண் பிரிவிற்கும், 1,839 பதவியிடங்கள் பொதுப் பிரிவிற்கும் ஆக மொத்தம் 4,565 பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நகர்புறத்தை பொறுத்தவரை 15 பதவியிடங்கள் ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கும், 9 பதவியிடங்கள் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கும், 90 பதவியிடங்கள் பொது பெண் பிரிவிற்கும், 85 பதவியிடங்கள் பொது பிரிவிற்கும் ஆக மொத்தம் 199 பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை நகர்புறத்தில் 51 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 51 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 165 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 267 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதியை பொறுத்தவரை 10 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 10 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 2,281 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் 2,744 கையிருப்பில் உள்ளது. இவ்வாக்குப்பெட்டிகள் தேர்தலுக்கு போதுமானது. நகர்புறத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை கட்டுப்பாட்டுக் கருவி 700-ம், வாக்குப்பதிவு கருவி 1,285-ம், மின்கலன்கள் 650-ம் உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இதையும் படிங்க:
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 195 மதுபாட்டில்கள் பறிமுதல்!