புதுக்கோட்டை மாவட்டம் கும்மங்குளத்தில் ஆதிதிராவிடர் மக்கள் முருகன் கோயிலை எழுப்பி சுமார் 50 ஆண்டுகளும் மேலாக வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயில் முன்பாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் முடி திருத்தகம் கடையை அமைத்துக்கொடுத்துள்ளனர். இதற்கு ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த இரு சமூகத்தினருக்கு மோதல்கள் ஏற்பட்டதில், ஏழு பேர் காயமடைந்தனர். மோதலின் போது அவர்களை இழிவாக பேசியும் தாக்கியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் புதுக் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சாதியின் பெயரைச் சொல்லி தாக்கியும், கோயில் இடத்தை ஆக்கிரமித்து முடி திருத்தகம் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கதாததை கண்டித்து கும்மங்குளம் ஆதிதிராவிடர் மக்கள் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டு வந்தனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், வட்டாட்சியர் கோரிக்கைகளையும், நிறைவேற்றுவதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.