ETV Bharat / state

மாணவர் நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலர் எடுத்த முடிவு - Greetings

புதுக்கோட்டை: வெயில் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்கம் கூட்டம் அவரவர் வகுப்பிலேயே நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

prayer
author img

By

Published : Jun 21, 2019, 10:25 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இறைவணக்கக் கூட்டத்தில் நிற்க முடியாமல் பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் நடைபெறும் இறைவணக்க கூட்டம் அவரவர் வகுப்பிலேயே நடத்தலாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாணவர் நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலர் எடுத்த முடிவு

இதுகுறித்து வனஜா கூறுகையில், “வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக காலை இறைவணக்கம் கூட்டத்தில் மாணவர்கள் சிலர் மயக்கமடையும் சூழல் உள்ளதால் வெயிலின் தாக்கம் குறையும் வரை வகுப்பறையில் வைத்து இறைவணக்க கூட்டத்தினை நடத்துமாறும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களையும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Intro:வெயில் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனிமேல் இறைவணக்கம் கூட்டம் அவரவர் வகுப்பிலேயே நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு..

Body:புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகளில் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு வகுப்பறைகளில் இறைவனுக்கு பாடல்களைப் பாடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் காஜா புயலின் தாக்கத்தினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து தற்போது கோடை காலத்தில் நிழலை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் தொடங்கியிருக்கும் நிலையில் வெயில் காரணமாக மாணவர்கள் இறைவணக்க கூட்டத்தில் நிற்கமுடியாமல் தவித்து வருகின்றனர் என்று கூறி நல இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா அவர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் நடைபெறும் வீரவணக்க கூட்டம் அவரவர் வகுப்பிலேயே நடத்தலாம் என முதன்மை கல்வி அலுவலர் வனஜா அவர்களால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது இதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் இறைவணக்க கூட்டம் வகுப்பறையிலேயே நடைபெற்றது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா தெரிவித்ததாவது,
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக காலை இறைவணக்கம் கூட்டத்தில் மாணவர்கள் சிலர் மயக்கமடையும் சூழல் உள்ளதால் வெயிலின் தாக்கம் குறையும் வரை மாணவர்களின் நலன் கருதி வாரந்தோறும் திங்கள் கிழமை மட்டும் நேரமின்றி பொதுக்கூட்டத்தினை நடத்துமாறும் வாரத்தில் மற்ற நாட்களில் வகுப்பறை இறைவணக்க கூட்டத்தினை நடத்துமாறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர் களையும் மெட்ரிக் பள்ளி முதல்வரையும் மற்றும் அனைத்து வகை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் களையும் வகுப்பறை இறைவணக்கக் கூட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதனால் மாணவர்களின் நலன் வெயிலில் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.
இந்த சுற்றறிக்கை பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டையில் மட்டும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.