இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கரோனா பரவுவதைத் தடுக்க சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் மனிதர்களை நம்பி வாழும் ஐந்தறிவு உயிரினங்ளும் உணவிண்றி தவித்துவருகின்றன. நாய்கள், பறவைகள், குரங்குகள் போன்ற ஜீவ ராசிகள் உணவு இல்லாமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தளத்தில் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றன. சுற்றுலாத் தளத்திற்கு வரும் மக்களை நம்பியே இந்தக் குரங்குகள் வாழ்ந்துவருகின்றன. ஊரடங்கு காரணமாக சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம் மூடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில நாள்களாக குரங்குகள் உணவின்றி தவித்துவருகின்றன. இதையறிந்த அன்னவாசல் உதவி ஆய்வாளர் வீரமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயாலயன், காவலர்கள் தர்மலிங்கம், கலியன், பிரவின், சின்னு உள்ளிட்டோர் அங்கிருக்கும் குரங்குகளுக்கு உணவுகள், பழங்கள், பொறி ஆகியவை வழங்கி உணவின்றி வாடிய குரங்குகளின் பசியை போக்கினர்.
இதையும் படிங்க:75 கிலோ அரிசி, 60 கிலோ சிக்கன்: தினமும் 1200 தெருநாய்களின் பசியாற்றும் பெண்