ETV Bharat / state

மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விற்க கூடாது-  புதுக்கோட்டை ஆட்சியர்

புதுக்கோட்டை: மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Pharmacies should not sell drugs without a doctor prescription said Pudukottai Collector

author img

By

Published : Jul 22, 2020, 5:23 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக கோவிட் பரிசோதனை முகாம்கள் அதிக அளவில் மேற்கொண்டு நோய் தொற்றை கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுகோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தங்களிடம் கரோனா நோய் அறிகுறியுடன் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அனைத்து தனியார் மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறிய நோய்களுக்கு மருத்துவரின் மருந்துச் சீட்டின் பெயரில் மருந்துகள் வாங்கப்பட்டால் அந்த நோயாளிகளின் முழு விபரத்தினை மருந்து விற்பனை செய்யும் கடைகள் மாவட்ட கட்டுப்பாட்டு மைய 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை மீறி விற்பனை செய்யும் மருந்துக்கடை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.