புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அதன் நிர்வாகிகள் கூறும்போது, ‘தீபாவளிக்கு மாவட்ட திரையரங்குகளில் பிகில் உள்ளிட்ட புதிய படங்கள் திரையிடப்பட உள்ளன. திரையரங்க உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக நபருக்கு ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் மக்கள் பொழுதுபோக்கிற்காக தான் திரையரங்கிற்கு வருகின்றார்கள். ஆனால் அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது’ என்றனர்.
வருங்காலங்களில் ஆன்லைன் மூலமே திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் அதேவேளையில் திரையரங்கிற்கு வரும் சாமானிய பொதுமக்களுக்கும் அங்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: டிக்கெட் விலையை குறைத்தால் சிறப்பு காட்சி கன்பார்ம் -கடம்பூர் ராஜூ