ETV Bharat / state

அறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! - Periyaur staute damage

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் அடையாளம் தெரியாத நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டதையடுத்து இன்று அவரது சிலை புதுப்பிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Periyar statue
author img

By

Published : Apr 11, 2019, 3:42 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே 1998-ம் ஆண்டு பெரியார் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர்களால் அந்த சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிந்த பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி செல்வராஜ், அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா ஆகியோர் போராட்ட களத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் பெரியார் சிலை புதுப்பிக்கப்படும். மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று உறுதியளித்தனர். காவல்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இந்நிலையில், சிலை சிற்பிகளை வரவழைத்து இரண்டு நாட்களாக பெரியார் சிலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இன்று தந்தை பெரியாரின் சிலை முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து திமுக உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மர்மநபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து இன்று அவரது சிலை புதுப்பிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே 1998 இல் பெரியார் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது.கடந்த 8ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிந்த திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்பி செல்வராஜ், அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா ஆகியோர் போராட்ட களத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் பெரியார் சிலை புதுப்பிக்கப்படும் மேலும் குற்றவாளிகளை கைது செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். காவல்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை யடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் சிலை சிற்பிகளை வரவழைத்து இரண்டு நாட்களாக பெரியார் சிலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இன்று தந்தை பெரியாரின் சிலை முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து திக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.