ETV Bharat / state

'சமநிலை பகுதியில் மிளகு விவசாயம் செய்ய விருப்பமா?' நம்பிக்கையை விதைக்கும் விவசாயி பாலுசாமி!

"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" என்பார்கள். அந்த மிளகு குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படும். ஆனால் எப்படி சமநிலை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது என்ற ஆவலுடன் வடகாடு பயணித்தோம்.

pepper-farming-in-pudukkottai
pepper-farming-in-pudukkottai
author img

By

Published : Jul 31, 2020, 1:40 PM IST

Updated : Aug 2, 2020, 6:42 PM IST

அந்தக் கிராமத்திற்குள் நுழையும்போதே மலைப்பகுதிக்குள் நுழைவது போன்ற உணர்வு. அந்தக் கிராமத்தில் வசித்து வரும் பாலுசாமியை நாம் பார்க்க வந்தோம். பகுதியில் மிளகு விவசாயம் செய்ய முடியும் என்று அனைவருக்கும் நிரூபித்தவர்.

அப்படி என்ன மகத்துவம் இந்த மிளகில்…? என கேட்டால் சிரித்துக் கொண்டே பதிலளிக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த மிளகு விவசாயி பாலுசாமி.

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது. அதிலும் தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் மிளகு விவசாயம் அதிகம்.

உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல். அந்த மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory), பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

மிளகு
மிளகு

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், மறதி, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம் ஆகியவற்றுக்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது. நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை சுரக்கச் செய்வதன் மூலம் பசியைத் தூண்டுகிறது.

எங்களை மிளகு விவசாயம் பக்கம் எது கொண்டுச் சென்றது?

1990இல் கேரளாவிற்கு பேப்பர் மில்லுக்கு வேலைக்கு சென்றேன். அங்கு மிளகு விவசாயம் செய்திருந்ததை பார்த்தேன். ஆனால் குறைவாக செய்திருந்தனர். காரணம் என்ன என்று வினவியபோது, இங்கு வெயில் குறைவு. அதனால் விளைச்சலும் குறைவு என்றனர். அப்போதுதான் என் மனதில், புதுக்கோட்டையில் வெயிலும் மழையும் சமமாக இருப்பதால் மிளகு நன்றாக விளையும் என்ற எண்ணம் தோன்றியது.

புதுக்கோட்டையில் மிளகு விவசாயம்
புதுக்கோட்டையில் மிளகு விவசாயம்

அங்கிருந்து 36 ரக மிளகுகளில் 10 ரகத்தை தேர்வு செய்து என் தோட்டத்தில் கொண்டுவந்து வைத்தேன். ஒரு வருடத்தில் ஒரு மிளகு கொடிக்கு 5 கிலோ மிளகு அறுவடை செய்தேன். மிளகு செடிகளை அருகிலுள்ள விவசாயிகளுக்கும் கொடுத்து விவசாயம் செய்ய வைத்தேன். தற்போது மிளகும் மட்டுமல்லாமல் ஏலக்காய், மலை இஞ்சி, நுணா பழம், ஜாதிக்காய், சாக்கோ மரம், என மலைப்பகுதியில் விளையக்கூடிய அனைத்தையுமே சமநிலை பகுதியில் விளைய வைத்துள்ளேன். மிளகு கொடியில் மட்டும்தான் காய்க்கிறது. ஆனால் மிளகுச் செடியை உருவாக்கி அதையும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகக் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்யப்படும் மிளகு விவசாயம் பற்றி...

புதுக்கோட்டையில் சுமார் 50 விவசாயிகள் 300 ஏக்கர் அளவில் மிளகினை பயிரிடப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வடகாடு கிராமத்திலிருந்து தரமான மிளகு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மலைப்பகுதியில் விளையக்கூடிய மிளகை விட இக்கிராமத்தில் விளைவிக்கக்கூடிய மிளகு பருமன் அதிகமாகவும் காரம் அதிகமாகவும் காணப்படுகிறது.

அனைத்து சமநிலை பகுதியிலும் மிளகு விவசாயம் சாத்தியமா?

முழுக்கமுழுக்க வருடத்திற்கு ஒரு மிளகு செடி அல்லது கொடிக்கு 35 லிட்டர் தண்ணீர் மட்டுமே சொட்டு நீர் பாசனம் மூலமாகவும், இயற்கை முறையிலும் இம்மிளகு விவசாயம் செய்யப்படுகிறது. மிளகு மலைப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல் புதுக்கோட்டையில் உள்ள சம நிலப்பரப்பில் அனைத்து விதமான மண்களிலும் விளையும். அரசாங்கமும் தற்போது கொஞ்சம் மானியம் கொடுக்கத் தொடங்கியுள்ளது .

இங்கு விளைவிக்கக் கூடிய தரமான மிளகு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் நல்ல விலைக்கு கேட்கிறார்கள். இன்னும் நிறைய விவசாயிகள் இந்த விவசாயத்தில் இறங்கினால் மற்ற நாடுகளுக்கும் மிளகு ஏற்றுமதி செய்து நல்ல விற்பனையும், வருமானத்தையும் பெருக்க முடியும். விவசாயம் பொய்த்து விட்டதே என வாடும் விவசாயிகள் தாராளமாக இதனை விவசாயம் செய்வது சாத்தியம். யாரேனும் மிளகு விவசாயம் செய்ய விரும்பினால் தாராளமாக என்னை அழைக்கலாம்'' என்று நம்பிக்கையுடன் பதிலளிக்கிறார் விவசாயி பாலுச்சாமி.

நம்பிக்கையை விதைக்கும் விவசாயி பாலுசாமி

இதையும் படிங்க: 'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!'

Last Updated : Aug 2, 2020, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.