கரோனா ஊரடங்கினால், நல்ல நிlaiமையில் உள்ளவர்களே திண்டாடும் நிலையில் ஆதரவற்றோர், அடித்தட்டு மக்கள் என்ன செய்ய முடியும். இவர்களின் துயரை துடைக்க, அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். வாட்டி வதைக்கும் பசிக்கொடுமையால் ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஆதரவற்றோர் சாலையில் சுற்றித் திரியும் அவல நிலையை சொல்லி மாள முடியாது.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாட்ஸ் அப் மூலம் குழு ஒன்றை உருவாக்கி ஏழைகளுக்கு உணவளித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியடயை வைத்துள்ளது. ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த இளைஞர்கள் வெட்டி கதைகளை பேசாமல் பலருக்கும் முன் உதாரணமாய் இருந்து வருகின்றனர். வாட்ஸ் அப் மூலம் குழு ஒன்றை அமைத்து தன்னார்வலர்களை ஒன்றிணைத்து "மக்கள் தேசம்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் குழு நண்பர்களுடன் கலந்தாலோசித்து, கரோனாவால் வேலையின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு தன்னார்வ இளைஞர்களும் இணைந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, 'மக்கள் தேசம்' அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சரவணன் கூறுகையில், "மக்கள் தேசம் என்ற அமைப்பின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, வேலையில்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு அத்தியாவசிய பொருள்கள் கொடுக்க முடிவு எடுத்தோம். அதன்படி தொடர்ந்து கொடுத்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை தொடர்ந்து செய்வோம். இயன்றதை செய்வோம், இயலாதவர்களுக்கு என்பதை கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
உயிர் வாழ அடிப்படையானது உண்ண உணவுதான். அந்த உணவை தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். புதுக்கோட்டையில் உள்ள 5 அம்மா உணவகங்களைத் திறந்தால் நன்றாக இருக்கும். அதே போல அனைத்து ஊர்களிலும் சத்துணவு கூடங்களில் இருந்து உணவு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'எனது மகளுக்கு நடந்நது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது'- ஜெயஶ்ரீயின் தாய்!