புதுக்கோட்டை மாவட்டத்தில், 497 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அனைவருக்கும் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் புதிய முறையில் பேக்கேஜ் டெண்டர் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்தத் திட்டம் டெண்டர் பேக்கேஜ் அடிப்படையில் கொண்டுவந்தால் முறையாக குடிநீர் குழாய்கள் அமைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்களின் குடிநீர் தேவையும் முழுமையாக பூர்த்தியாகாது.
பேக்கேஜ் டெண்டர் முறைப்படி குடிநீர் குழாய்கள் அமைத்த பிறகு அதில் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் ஊராட்சி தலைவர்களையே பொதுமக்கள் கேட்பார்கள். ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள்தொகைக்கு ஏற்ப 20 முதல் 25 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
ஒட்டுமொத்தமாக கோடிக் கணக்கில் பேக்கேஜாக டெண்டர் விட்டால் அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளன. இதனால், பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்துவிட்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி ஊராட்சியின் மூலமாகவே பணியினை செய்ய ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், 37 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியை நேரில் சந்தித்து இன்று(ஜூலை 13) மனு அளித்தனர்.
இதையும் படிங்க: துபாயில் சிக்கித்தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை