புதுக்கோட்டை: எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை மூடுவது தொடர்பாக ஓஎன்ஜிசி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
கடந்த 2017-ல் அறிவிக்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், போராட்டத்தின்போது இம்மாவட்டத்தில் எரிபொருள் பரிசோதனைக்காக 7 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடி, கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களை உரிய விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு, கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆய்வு செய்த வல்லுநர்கள்
இந்நிலையில், கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றை அகற்றி, விளை நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்காக ஓஎன்ஜிசி பொது மேலாளர் சந்தானகுமார், மண்ணியல் வல்லுநர் அருண்குமார், முதுநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலை தொழில் நுட்ப வல்லுநர் அழகுமணவாளன், வட்டாட்சியர் சந்திரசேகர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று(அக்.4) ஆய்வு செய்தனர்.
கையகப்படுத்தப்பட்ட சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்பு ஏதும் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காதலியை தினமும் பேச சொல்லுங்கள் - சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்..!