புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செல்போன் கடை ஒன்றில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செல்போன்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்கவந்த உரிமையாளர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுதொடர்பாக நகர காவல் துறையினருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கொள்ளைச் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர், பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.