ETV Bharat / state

அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்ற 6 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

author img

By

Published : Feb 18, 2023, 8:58 PM IST

கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி அரசுப்பள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற, 6 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியை பூட்டிவிட்டு நேற்று (பிப்.17) மாணவ, மாணவிகளுடன், தலைமை ஆசிரியர் சேசு உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர் சிலர் புகார் அளித்தனர்.

அப்போது, கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, 6 ஆசிரியர்களுக்கும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 4 பேர், விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற போது, கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள், கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மாணவ, மாணவிகளை அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா அழைத்து சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி.? சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.