ETV Bharat / state

தண்ணீர் இல்லாததால் பெண் தர மறுப்பு! இடையூர் இளைஞர்கள் ஏக்கம் - water drought

புதுக்கோட்டை: வறட்சி காரணமாக தண்ணீர் பஞ்சம் இருப்பதால் தங்களது ஊரில் உள்ள இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுப்பதாகக் கூறி இடையூர் கிராம மக்கள் கலங்கிநிற்கின்றனர்

தண்ணீர் இல்லை... மணமுடிக்க பெண்ணும் இல்லை...!
author img

By

Published : Jun 11, 2019, 10:24 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இடையூர் கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தங்கள் கிராம இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் இன்று மனு கொடுத்தனர். இக்கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்துவருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, தண்ணீர் வசதி சாலை வசதி எதுவுமே எங்களுக்கு இல்லாமல், மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். தண்ணீரே இல்லாமல் எப்படி வாழ முடியும். ஊரில் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

தண்ணீர் இல்லாமல் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். தண்ணீர் வசதி கேட்டு எங்களது ஊரில் அலுவலர்களிடம் நிறைய மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என மக்கள் புலம்பிவருகின்றனர்.

Intro:தண்ணீர் பஞ்சம் இருப்பதால் எங்களது ஊரில் உள்ள இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர் தண்ணீர் இல்லாமல் அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம் புலம்பும் பொதுமக்கள்...

Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தென்ன மாறி இடையூர் போன்ற கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும் இதனால் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் இன்று மனு கொடுத்தனர்.
இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். அனைவரும் கூலித் தொழில் செய்து பிழைத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

தண்ணீர் வசதி சாலை வசதி எதுவுமே எங்களுக்கு இல்லை மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம் தண்ணீரே இல்லாமல் எப்படி வாழ முடியும் ஊரில் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் தண்ணீர் இல்லாமல் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம் தண்ணீர் வசதி கேட்டு எங்களது ஊரில் அதிகாரிகளிடம் நிறைய மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை இப்படியே போய்க் கொண்டிருந்தால் எங்கள் நிலைமை மிகவும் மோசமாகி விடும் தண்ணீர் பஞ்சம் இருப்பதாலும் சாலை வசதி மோசமாக இருப்பதாலும் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு கூட பெண் கொடுக்க மறுக்கின்றனர் இதனால் திருமணம் நடைபெறுவது கூட பிரச்சினையாகிறது திருமணமாகி வந்த பெண்களும் நான் இந்த ஊரில் இருக்க மாட்டேன் என்று வந்த சில நாட்களிலேயே கிளம்பி விடுகின்றனர் அந்த அளவுக்கு ஊரில் பிரச்சனை இருக்கிறது இதனை விரைவில் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.