புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காளியம்மன் கோயில் பகுதியில் சௌராஷ்டிரா உறவினர்களுக்குச் சொந்தமான கோவில் இடத்தில், சுப்புராமன் என்பவர் நகராட்சி அனுமதி இல்லாமல் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டி நடத்தி வந்தார்.
இந்நிலையில், சௌராஷ்ட்ரா உறவின்முறை சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதியை மூடி சீல் வைக்க உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் வினோத்குமார், வருவாய் அலுவலர்கள் காவல் துறை முன்னிலையில் திருமண மண்டபத்திற்கும், தங்கும் விடுதிக்கும் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: முறையான அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு சீல்