ETV Bharat / state

முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் வரை போராடுவோம் - கருணாஸ் - சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ்

முக்குலத்தோர் சமூதாயத்திற்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு தரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரது நிலைப்பாட்டை பொறுத்து எனது நிலைப்பாடும் மாறும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்
author img

By

Published : Jan 27, 2021, 5:04 AM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான் இரட்டை இலை சின்னத்தில் தான் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். அதன்படி தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையில் நாம் தலையிட கூடாது என்றார்.

சசிகலா தன்னை முதலமைச்சர் ஆக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறி வருவது குறித்த கேள்விக்கு, 'கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாக தெரியும். தற்போது அங்கு நடைபெற்றதை நான் கூறமாட்டேன், அதற்கென்று நேரம் காலம் வரும் போது கூறுவேன்.

முக்குலத்தோருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பலமுறை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். ஐந்து ஆண்டுகளில் அரசியலில் எவ்வளவு மாற்றங்கள் வந்துள்ளது. நாளை என்ன நடக்கும் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

சசிகலா முதலில் வெளியே வரவேண்டும். அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை கூற வேண்டும். முக்குலத்தோர் புலிப்படைக்கு அரசியல் அங்கீகாரம் அளித்து கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எனக்கு வாய்ப்பளித்தவர்களில் சசிகலாவும் ஒருவர். வெளியே வந்த பிறகு அவர் எடுக்கும் நிலைப்பாட்டைப் பார்த்த பிறகு என்னுடைய நிலைப்பாடு இருக்கும். திமுக தலைவருக்கு வேல் கொடுத்ததை அரசியலாக்க பார்க்கக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க: பாமகவின் தேர்தல் கூட்டணி கணக்கு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.