ETV Bharat / state

எட்டு வழிச்சாலை; மக்களுக்கு விருப்பமில்லை என்றால் புகுத்தமாட்டோம் - மத்திய அமைச்சர் - Pudukottai District News

நிலம் கையகப்படுத்த முடியாமலோ அல்லது மக்களுக்கு விருப்பமில்லாமலோ போனால் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மக்களிடம் புகுத்தப்போவதில்லை என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விஜயகுமார் சிங் கூறினார்.

எட்டு வழிச்சாலை; மக்களுக்கு விருப்பமில்லை என்றால் புகுத்தமாட்டோம் - அமைச்சர் விஜயகுமார் சிங்

author img

By

Published : Dec 29, 2022, 9:18 PM IST

எட்டு வழிச்சாலை; மக்களுக்கு விருப்பமில்லை என்றால் புகுத்தமாட்டோம் - அமைச்சர் விஜயகுமார் சிங்

புதுக்கோட்டை: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் திருமயம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் விஜயகுமார் சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது,கேட்கப்பட்ட கேள்விகளும் பதிலும்...

கேள்வி: கால அவகாசம் முடிந்த பிறகும் இயக்கப்படும் டோல் கேட்டுகள் எப்போது மூடப்படும்?

பதில்: "டோலின் காலம் முடிந்த பிறகு மெல்ல மெல்ல மராமத்துப் பணிகள் செய்யப்பட்டு, டோல்கேட் தொடரும். தற்போது பரிசோதனையின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறோம். நேரடியாக வாகனங்களை நிறுத்தாமல் டோலின் மேல் பொருத்தப்பட்ட நவீன கருவியின் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணம் நேரடியாக வசூலிக்கப்படும் படி, வெளிநாடுகளைப் போல் இந்த டோல் சிஸ்டம் செயல்படுத்தப்படும்.

அதற்கான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. இதே வேளையில் தற்போது சிலர் பணம் செலுத்தாமல் டோலில் இருந்து தாவி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அது சரி செய்யப்படும்" என்றார்.

கேள்வி: புதிய டோல் வருமா?

பதில்: "ஒவ்வொரு 60 கி.மீ தொலைவுக்கும் ஒரு டோல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடையில் புதிதாக ஏதேனும் பாலம் கட்டுமானப் பணி வருகின்ற போது, அதன் அருகிலேயே ஒரு டோல்கேட் அமைக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது. டோல்கேட்டில் வசூலிக்கப்படும் பணம், பராமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், மராமத்து பணிகளுக்காக சுழற்சி முறையில் செலவிடப்பட்டு வருகிறது"என்றார்.

கேள்வி: ஈசிஆர் சாலையில் ஏற்கனவே சாலைகள் இருக்கும்பட்சத்தில் புதிதாக 100 மீட்டர் அளவிற்கு சாலை அமைப்பது ஏன்?

பதில்: "பயண தூரத்தையும், நேரத்தையும் குறைப்பதற்காக இந்திய அரசு ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றது. கிரீன் பீல்ட் அலைன்மென்ட். அதாவது நகருக்குள் வாகனங்கள் செல்லாமல், இந்த பாதை வழியாக செல்லும் பொழுது நேரத்தை குறைப்பதாக இந்த திட்டம் பயன்படும். எனவே, சாலைகள் இருந்தாலும் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் புதிய சாலைப் பணிகள் நடைபெறும்" என்றார்.

கேள்வி: ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி உங்கள் கருத்து?

பதில்: "அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்து வருங்காலத்தில் வருபவர்கள் மீண்டும் இந்த சட்டத்தை மாற்றம் செய்துவிடாத வகையில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

கேள்வி: எட்டுச் வழி சாலைகள் அமைக்கும் திட்டம் பற்றி தங்கள் கருத்து?

பதில்: "சட்டத்தின் அறிவுறுத்தல்படி மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும், ஒருவேளை நிலம் கையகப்படுத்த முடியாமலோ மக்களுக்கு விருப்பம் இல்லாமலோ இருந்தால் அதை மக்களிடம் புகுத்தப் போவதில்லை" என்று மத்திய அமைச்சர் விஜயகுமார் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Rain - அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.