ETV Bharat / state

'திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் தலையில் துண்டைப் போட்டுதான் போகணும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் தலையில் துண்டைப் போர்த்திக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
author img

By

Published : Mar 26, 2019, 4:58 PM IST

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் கூட்டணி வேட்பாளர்கள் இளங்கோவன் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சிகளை போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசுவது அல்ல; எப்பொழுதும் ஒரே மாதிரியான அரசியலை அதிமுக முன்னெடுத்துச் செல்கிறது.

நமது நாட்டிற்கு மோடி ஆட்சிதான் சிறப்பான ஆட்சியாக அமையும். மக்கள் இந்த தேர்தலை கிரிக்கெட் விளையாடுவதை போல பாவித்து எங்களை பவுண்டரி, சிக்சர், செஞ்சுரி என அடிக்கவைத்து வேட்பாளர்களை தூக்கிவிட வேண்டும்.

இந்த நாட்டில் காலரை தூக்கிவிட்டு கெத்தாகச் செல்ல வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் தலையில் துண்டைப் போர்த்திக் கொண்டு போக வேண்டியதுதான்.

வைகோ மேடையில் நின்று கொண்டு யாரை முதலமைச்சராக கை காட்டலாம்... யார் பிரதமராக வருவார்கள் என சின்னப்பிள்ளை போல சைகை காட்டி வருவது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் நிலையான கட்சிகள் அல்ல; அவர்கள் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பி இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் காவிரி மற்றும் கொண்ட ஆறு இணைப்புத் திட்டம் இரண்டு ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Intro:இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கட்சியின் கூட்டணி வேட்பாளர்கள் இளங்கோவன் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்..

Body:இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
எதிர்க்கட்சிகளை போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசுவது அல்ல அதிமுக எப்பொழுதும் ஒரே மாதிரி அரசியலில் செயல்படக் கூடியது தான் அதிமுக கட்சி. அதிமுக கட்சியில் இணைந்து இருக்கும் கூட்டணியானது இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் மக்களிடத்தில் நேரடியாக சந்தித்து சேகரித்து அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு மோடி ஆட்சி தான் சிறப்பான ஆட்சியாக அமையும் மக்கள் இந்த தேர்தலை கிரிக்கெட் விளையாடுவதை போல பாவித்து எங்களை four, six , century என அடிக்க வைத்து வேட்பாளர்களை தூக்கிவிட வேண்டும். இந்த நாட்டிலே காலரை தூக்கி விட்டு கெத்தாக செல்ல வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் பிஜேபி அதிமுக கட்சியின் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தலையில் துண்டைப் போர்த்திக் கொண்டு போக வேண்டியதுதான். இந்த நாட்டைப் பற்றி சற்றும் கவலைப்படாத கட்சிகள் என்றால் அதுதான். நாங்கள் வாக்கு சேகரிக்கும் இடத்திற்கு செல்லும் போதெல்லாம் மக்கள் ஆரவாரமாக வரைந்திருக்கின்றனர் இதிலேயே தெரிகிறது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு இந்த ஆட்சியிலே பல்வேறு நலத்திட்ட உதவிகளை எண்ணிக்கையற்ற அளவிற்கு செய்துள்ளோம் இதனை அம்மா தெய்வமாக நின்று பார்த்து மகிழ்ச்சி அடைவார் அதைப்போல மக்கள் அனைவரும் அதிமுகவிற்கு வாக்களித்தால் அதையும் அம்மா அதிகமாக நின்று மகிழ்ச்சி அடைவார்.
என்று தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வைகோ மேடையில் நின்று கொண்டு யாரையும் முதலமைச்சராக கை காட்டினால் யார் பிரதமராக காட்டலாம் என சின்ன பிள்ளை போல சைகை காட்டி வருகிறார் அவரிடம் கேட்டால் வைக்கச் சொன்னார் என்கிறார்கள் என நினைத்தால் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் நிலையான கட்சிகள் அல்ல அவர்கள் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகளை நகையாக பேசினார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பி இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் காவிரி மற்றும் கொண்ட ஆறு இணைப்பு திட்டம் இரண்டு ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று விஜய பாஸ்கரும் இளங்கோவனும் உறுதியளித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.