தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் தேர்தலுக்காக விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் பல்வேறு குறிப்புகளில் முக்கியமாக குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். அதில் தனது இரண்டு மகள்களையும் பரப்புரையில் ஈடுபடுத்தி வருகிறார். அவர்கள் விஜய பாஸ்கருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இந்நிலையில் "தனது தந்தைக்கு வாக்களியுங்கள் அவர் உங்க வீட்டு பிள்ளை" என ஓட்டு கேட்பதும், மக்களோடு இணைந்து கும்மி, கோலாட்டம் ஆடுவது, வயல்களில் நாற்று நடுவது என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது மக்களிடையே கவனம் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் தீ விபத்து!