ETV Bharat / state

விரைவில் தமிழகம் முழுவதும் மின்சார பேருந்துகள்.. அமைச்சர் சிவசங்கர் சொல்வது என்ன? - pudukkottai

New Electric Buses in Chennai: சென்னை மாநகரத்தில் முதற்கட்டகமாக 100 எலக்ட்ரிக்கள் பேருந்துகளை பரிசோதனை முயற்சியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுக்கோட்டையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னையில் 100 எலக்ட்ரிக் பஸ்கள் பரிசோதனை இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 10:47 AM IST

சென்னையில் 100 எலக்ட்ரிக் பஸ்கள் பரிசோதனை இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

புதுக்கோட்டை: இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் நடக்க உள்ள மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் போட்டி நேற்று (செப்.8) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அதை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "சென்னை மாநகரத்தில் முதற்கட்டகமாக 100 எலக்ட்ரிக் (Electric) பேருந்துகளை பரிசோதனை முயற்சியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 685 காலி பணியிடங்களை நிரப்ப, ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்தபடியாக அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், தற்போது பேருந்து சேவையானது பல இடங்களில் தடைபட்டுள்ளது. இதனை சீர் செய்து வருகிறோம். புதுமைப் பெண் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பேருந்துகளில் கூட்டமும் அதிகரித்துள்ளது.

எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன்களை வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளார். அதனைக் கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன் உள்ளிட்ட நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 4, 5 மாதங்கள் மட்டுமே பாக்கி உள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணப் பலன்கள் வழங்கப்படும்.

4 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் திறக்கப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நான்கு மாதத்திற்குள் 4 ஆயிரம் புதிய பேருந்துகள், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். எல்லா பேருந்துகளையும் நிறம் மாற்ற நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புறநகர் பேருந்துகளை மட்டுமே நிறம் மாற்றுகிறோம்.

மேலும், புறநகர் பேருந்தில் சீட் எண்ணிக்கை 5 குறைக்கப்பட்டு உள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள் பயணிக்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பேருந்துகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பது நீண்ட கால பிரச்சனை. அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடித்தள சட்டம் சிறப்பாக உள்ள பேருந்துகளில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு, அதனை புதிதாக கூடு கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை மாநகரத்தில் ஓடும் இரண்டு ஆயிரத்து ஐநூறு பேருந்துகளில், நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமராக்கள் முழுவதுமாக பொருத்தப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேருந்துகளில் படிப்படியாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.