ETV Bharat / state

"எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடியவர் தமிழக முதல்வர்” - அமைச்சர் ரகுபதி!

Minister Regupathy: "நாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலத்திலேயே பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடியவர் தமிழக முதல்வர்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடியவர் தமிழக முதல்வர்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:16 AM IST

எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடியவர் தமிழக முதல்வர்

புதுக்கோட்டை: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று (அக்.26) புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய ஆர்.டி.ஓ விசாரணையும் மேற்கொண்டு வருகிறோம். ஆளுநருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எதுவும் கெடவில்லை” என்றார்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை தப்ப விட்டதாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “அவர்கள் எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகின்றனர் என்று தெரியவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்துவிட்டது தொடர்பான செய்தி அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வந்து விட்டது.

சம்பந்தப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் திட்டம் தீட்டியயதாக எங்களுக்கு தெரியவில்லை. திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்குடன், வேறு யாரோ சிலர் இதை செய்திருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கைது செய்யப்பட்ட நபர், மனநோயாளி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்துவதால், இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசும் முதல் நபராக ஆளுநர் உள்ளார்.

திமுக எப்பொழுதும் ஆளுநர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது கிடையாது. இந்த விவகாரத்தை தொடங்கியது ஆளுநர்தான். ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். எதிர்கட்சியைப் போன்று ஆளுநர், தான் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.ஆனால் ஒன்று, நாங்கள் ஆட்சி செய்கிற இந்த மாநிலத்திலேயே, பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது” என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எப்படி இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்கினால், அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்க முடியாது. அவர்கள் தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் வளராது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கினாலும், தமிழக மக்களிடம் எடுபடாது” என்றார்.

ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறான ஒன்று. தமிழக முதல்வரின் ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு இல்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான ஒன்று.

எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடியவர் தமிழக முதல்வர். ஆளுநர் குற்றம் சாட்டும்போது, அதற்கு பதில் அளிப்பது எங்களின் கடமை. அதைத்தான் திமுக அரசு செய்து வருகிறது. ஒரு போதும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.