ETV Bharat / state

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை - அமைச்சர் மெய்யநாதன் உறுதி

வருகிற 18ஆம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள தாலுகா அளவில் இருக்கும் மீனவ சங்கத்தினர், காவல் துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என அனைத்துத் துறைகளும் சேர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, குழாய்களை என்ன செய்வது என்று அன்றைய தினம் முடிவு செய்யப்படு என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை - அமைச்சர் மெய்யநாதன் உறுதி!

author img

By

Published : Mar 11, 2023, 5:07 PM IST

புதுக்கோட்டை: ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கட்டளை ஊராட்சி மேலைக்கொள்ளையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலையரங்கத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று (மார்ச் 11) திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “சிபிசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்படுவது தொடர்பாக வருகிற 18ஆம் தேதி மீனவ கிராம மக்களோடு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, அதில் உரிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர் சந்திப்பு

இன்று சிபிசிஎல் நிர்வாகம் குழாய்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதில் இருந்து லேசான கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மற்ற நிர்வாகத்தினரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள், கசிவை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் தற்போது கசிவு சரி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர் மாதிரிகள் எடுத்து உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பியது. இது தொடர்பான முடிவுகளும் வந்துள்ளது. அதேபோல் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் மூன்று விஞ்ஞானிகளை நியமித்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அரசாணை பிறப்பித்தார். அவர்கள் களத்திற்கு கடந்த 6ஆம் தேதியே சென்று, அவர்களும் நீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறோம். இனிமேல் எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று சிபிசிஎல் நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டுத் துறை, மீன்வளத்துறை ஆகியோர் தரப்பில் வலியுறுத்தி உள்ளோம். வருகிற 18ஆம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள தாலுகா அளவில் இருக்கும் மீனவ சங்கத்தினர், காவல் துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என அனைத்துத் துறைகளும் சேர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, குழாய்களை என்ன செய்வது என்று அன்றைய தினம் முடிவு செய்யப்படும்.

கடந்த காலங்களில் சுனாமி, புயல், வெள்ளங்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிப்பை சந்தித்துள்ளோம். அதேபோல் இந்த ஆண்டு வெப்ப அலைகள் மூலமாக மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என்ற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் தந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் கடந்த 3ஆம் தேதி காலநிலை மாற்றத்திற்கான குழு கூட்டத்தைக் கூட்டி, அதில் பல்வேறு துறை அமைச்சர்கள் தலைமையில் வெப்பநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர் கொள்ள, எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை சந்தித்தபோது வெப்ப அலையால் பாதிக்கக்கூடிய பாதிப்புகளை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வெப்ப அலையில் இருந்து நாம் வெளியே வரும்போது, நமது உடலில் உள்ள நீர் ஆவி ஆகிறது.

அது நமக்குத் தெரியாமலேயே மூளையில் ரத்தக் கசிவாக ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய நிலையும் உள்ளது. ஆகையால் இதற்கு நடவடிக்கை எடுக்க உள்ள குழுவில், பல்வேறு விஞ்ஞானிகள் இருக்கின்றனர். அவர்களை வைத்து இந்த வெப்ப அலைகளை எவ்வாறு எதிர் கொள்வது, எப்படி மக்களை பாதுகாப்பது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மிகக் கவனமாக இருக்கிறார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - பட்டினச்சேரி மக்களின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.