ETV Bharat / state

அதிக விலைக்கு மாஸ்க்! அதிரடியில் மாவட்ட ஆட்சியர்! - Medical Closed by Pudukkottai Collector

புதுக்கோட்டை: முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்தகம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இழுத்து மூடினார்.

மெடிக்கலை மூடிய புதுக்கோட்டை கலெக்டர்
மெடிக்கலை மூடிய புதுக்கோட்டை கலெக்டர்
author img

By

Published : Mar 20, 2020, 11:55 PM IST

கரோனா வைரஸ் காரணமாக, அனைத்து ஊர்களிலும் முகக்கவசம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கையில், "முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது" என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பையும் மீறி இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீழராஜவீதி பகுதியில் உள்ள ராயல் மெடிக்கல் என்ற மருந்தகத்தில் முகக் கவசம் அதிகமாக விலைக்கு விற்கப்பட்டது.

மெடிக்கலை மூடிய புதுக்கோட்டை கலெக்டர்

இந்த தகவல் அறிந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியம், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்து கடையை இழுத்து மூடினர்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.