புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த ஆண்டு தனது வீட்டிற்குப் பக்கத்துத் தெருவில் வசித்துவரும் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின்பேரில் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாலமுருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2.5 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.