ETV Bharat / state

புதுக்கோட்டையில் 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்! - Pudukottai Difficult polling booths in Local Elections

புதுக்கோட்டை: மொத்தம் உள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களில் 232 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானதாகக் கருதப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Difficult polling booths in Pudukkottai
Difficult polling booths in Pudukkottai
author img

By

Published : Dec 17, 2019, 2:05 AM IST

உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களில் 214 இடங்களில் 232 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகக் கருதப்படுகின்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தல் பணிக்கு முதல்கட்டமாக 1,600 காவலர்களும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 1,520 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு

முன்பு நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில்தான் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலை முன்னிட்டு தனி நபர்கள் தற்காப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கிகள் இதுவரை 450 பேர் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

வெளியூரில் இருப்பவர்களும் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக எட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது, மேலும் பிரச்னைக்குரிய நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க:

அரசியலில் இல்லை... நடிகனாகவே இருக்க விரும்புகிறேன் - அபிஷேக் பச்சன்

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2301வாக்குச் சாவடிகள் உள்ளது, இதில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது, பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், மேலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மேலும் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றது, தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேட்டியளித்தார்.

பின்னர் பத்திரிகையாளர் சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது,

2301 வாக்குச்சாவடி மையங்களில் 214 இடங்களில் 232 மையங்கள் பதட்டமான வையாக கருதப்படுகின்றது, 1520 தேர்தல் பணிக்கு மொத்தம் முதல்கட்ட தேர்தலுக்கு 1600 போலீசார் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 1520 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், பதட்டமான வாக்குச்சாவடிகள் முன்பு நடைபெற்ற சம்பவங்களை வைத்தும் இரு சமுதாயம் இருகட்சிகளுக்கு உள்ள பிரச்சனைகள் பொருத்தும் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது, தேர்தலை முன்னிட்டு தனிநபர்கள் தற்காப்புக்காகவும் பல்வேறு காரணத்திற்காகவும் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கிகள் இதுவரை 450 பேர் காவல்நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர், வெளியூரில் இருப்பவர்களும் ஒப்படைப்பதாக கூறி உள்ளனர், இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, மேலும் பிரச்சனைக்குரிய நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.