ETV Bharat / state

திருநல்லூர் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 66 பேர் காயம் - புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பற்கேற்றன. காளைகள் முட்டியதில் 66 பேர் காயமடைந்துள்ளனர்.

thirunallur jallikattu
thirunallur jallikattu
author img

By

Published : Feb 13, 2020, 10:00 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த திருநல்லூரிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய் கோட்டாச்சியர் டெய்சிகுமார் உறுதிமொழியுடன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, பின் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன.

ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்தன. அவற்றை 200க்கும் மேற்ப்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினார்கள். இதில் சில காளைகள், மாடுபிடி வீரர்களைப் தங்கள் பக்கத்தில் நெருங்கக்கூட விடவில்லை. சில காளைகள் தன்னைப் பிடிக்கவந்த மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடின.

திருநல்லூர் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 66 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 66 பேர் காயமடைந்தனர். அங்கு தயார் நிலையிலிருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த 20 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டைக் காண தமிழ்நாடு முழுவதும் பலர் குவிந்ததால் இலுப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிகாமணி தலைமையில் இலுப்பூர் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

இதையும் படிங்க: காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்: 6 பேர் இடமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.