ETV Bharat / state

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது - முத்தரசன் - Mutharasan Press Meet

புதுக்கோட்டை: திமுக கூட்டணி கட்சிகளை எந்தக் காலத்திலும் யாராலும் உடைக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு புதுக்கோட்டை முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு Indian Communist Party Secretary Mutharasan Press Meet Mutharasan Press Meet Pudukottai Mutharasan Press Meet
Mutharasan Press Meet
author img

By

Published : Jan 29, 2020, 8:53 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் படிப்பிற்காக சீனா சென்றுள்ள மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்துவது என்பது அபாயகரமானது. இதற்கு முன்பு முப்படைத் தளபதி அரசியல் பேசியது பரபரப்பாக உள்ள நிலையில், இப்போது ஆர்எஸ்எஸ் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்துவது என்பது அபாயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியது. அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் தொடங்கி வைத்தது. அப்போது வந்த அன்றைய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் பிரதிநிதிகளை டெல்லி வரை அழைத்துச் சென்றார். மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்ற உறுதியை வாங்கிக்கொண்டு ஊருக்குத் திரும்புவதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. தற்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, மக்கள் கருத்து தேவை இல்லை என்று அறிவிப்பு செய்துள்ளது.

முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

இதனால் டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மவுனம் காத்து வருவது ஏன் என்பது தெரியவில்லை. பொது அறிவிப்பு செய்து அதற்கான காரணங்களைச் சொல்லவேண்டும். மவுனம் காத்து திட்டத்தினை கைவிட முயற்சிக்காமல் தப்ப முயலக்கூடாது. டொல்டா பகுதியில் நடந்த அனைத்து கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

ரஜினி இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய படங்கள் பார்ப்பதற்கு திரையரங்குகளில் மூட்டைப்பூச்சிகள் மட்டுமே இருப்பதாகத் தெரியவருகிறது.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதை மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். அவர்கள் கூட்டணியில் உள்ள பாமக இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. பாஜக தவிர மற்ற அனைவரும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டு சாமிகளுக்கு தமிழில் சொல்வது தான் புரியும்.

தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடத்துவது எப்போது என்பது தெரியாது. அது இரண்டு பழனிசாமிகளுக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றொன்று தேர்தல் ஆணையர் பழனிச்சாமி.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். திமுக கூட்டணியை எந்த காலத்திலும் உடைக்க முடியாது. ஆனால் இக்கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது என்றும் முடியாத ஒன்று' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

‘ஓ.எஸ். மணியன் இந்திய குடிமகனே இல்லையென்ற நிலை ஏற்படலாம்’ - முத்தரசன்

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீரமங்கலத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி....

கொரானோ வைரஸ் சீனாவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து படிப்பிற்க்காக
மாணவர்களை
மீட்கும் முயற்சியில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்துவது என்பது அபாயகரமானது இதற்கு முன்பு முப்படை தளபதி அரசியல் பேசியது பரபரப்பாக உள்ள நிலையில் இப்போது ஆர்எஸ்எஸ் இராணுவ பயிற்சி பள்ளி நடத்துவது என்பது அபாயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் எந்த பிரிவினருக்கான தேர்வாக இருந்தாலும் மாணவர்களின் இளைஞர்களின் நம்பிக்கையை இழந்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

தேர்வாணையத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அரசியல்வாதியின் பின்னால் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களை உடனடியாக மக்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டம் தொடங்கியது அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் தொடங்கி வைத்தது அப்போது வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெடுவாசல் பிரதிநிதிகளை டெல்லி வரை அழைத்து சென்று மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்புவதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது மத்திய அரசு தற்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மக்கள் கருத்து தேவை இல்லை என்று அறிவிப்பு செய்துள்ளது இதனால் டெல்டாவில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது புதுச்சேரி முதலமைச்சர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மௌனம் காத்து வருவது ஏன் என்பது தெரியவில்லை.

பொது அறிவிப்பு செய்து அதற்கான காரணங்களை சொல்லவேண்டும் மௌனம் காத்து திட்டத்தினை கைவிட முயற்சிக்காமல்
தப்ப முயலக்கூடாது.
நடந்த முடிந்த டொல்டா பகுதியில் நடந்த அனைத்து கிராமசபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது இதற்கு மத்திய மாநில அரசுகள் மதிப்பு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.
நடப்பாண்டில்
பருவமழை ஓரளவு நல்லபடியாக பெய்து விவசாயம் செழித்து இருந்தது ஆனாலும் அறுவடை நேரத்தில் புகையான்நோய்,
பூஞ்சான்நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அரசாங்கம் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன் பயிர் காப்பீடுகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.
ரஜினி இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார் அவருடைய படங்கள் பார்ப்பதற்கு திரையரங்குகளில் மூட்டைப்பூச்சிகள் மட்டுமே இருப்பதாக தெரியவருகிறது மறக்கப்பட வேண்டியது என்று பெரியாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் சொன்னதை மறுப்பதா.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு தமிழில் செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது இதை மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும் ஆனால் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி
வாயை திறக்க மாட்டேன் என்கிறர் அவர்கள் கூட்டணியில் உள்ள பாட்டாளிமக்கள் கட்சி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது பாஜக தவிர மற்ற அனைவரும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஆதரிக்கிறார்கள் தமிழ்நாட்டு சாமிகளுக்கு தமிழில் சொல்வது தான் புரியும்.
தமிழ்நாட்டில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தேர்தல்கள் நடத்துவது என்பது எப்போது என்பது தெரியாது இரண்டு பழனிச்சாமிக்கு மட்டும்தான் தெரியும் ஒன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றொன்று தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இருவருக்கு மட்டும்தான் தெரியும்.
சேலத்தில் ஒரு ஒன்றியத்தில் தலித் உறுப்பினரே ஒன்றிய சேர்மனாக வர முடியும் என்ற நிலையில் அங்கே 2 திமுக சார்பில் போட்டியிட்ட தலித் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தல் நாளில் மற்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஒன்றிய பெருந்தலைவராக வருவதை அதிமுக விரும்பவில்லையா அல்லது முதல்வர் விரும்பவில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 27 ஒன்றியங்களில் எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் கடைசி நேரத்தில் தேர்தல்களை நிறுத்தி வைத்துள்ளனர் அதேபோல சிவகங்கை மாவட்ட தேர்தலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இதற்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகள் அனைவரும் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி என்பது உடைக்க முடியாது கூட்டணி அது எந்த காலத்திலும் உடைக்க முடியாது ஆனால் பல பேர் கனவு இந்த கூட்டணியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அது என்றும் முடியாத ஒன்றாக நிகழும் என கூறினார்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார்,நகர செயலாளர் தமிழ்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
பின்னர் குளமங்கலம்(வடக்கு) பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.