ETV Bharat / state

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை எரித்துக் கொன்ற கணவர் கைது - Pudukkottai district news in tamil

புதுக்கோட்டை அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

husband arrested for killing his wife in aranthangi
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர் கைது
author img

By

Published : Feb 14, 2021, 8:44 AM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கும்பளாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் (39) என்பவருக்கும், அமிர்தவல்லி (19) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், சேகர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்றும் சேகர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த சேகர், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அமிர்தவல்லியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் குளத்தில் விழுந்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.