ETV Bharat / state

கரோனா வார்டில் சுகாதாரக் கேடு: நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வரும் அவலம் - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: கரோனா வார்டில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடு காரணமாக, அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்தும் வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

aranthangi
aranthangi
author img

By

Published : May 5, 2021, 10:41 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 60க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 50 பேர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா நோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியில் சுகாதாரமற்று காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்தோடு கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு வீடுகளிலிருந்து உணவு எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகள், வார்டின் முன்பே கழற்றி போடப்படுவதால் மற்றவர்களுக்கும் தொற்றுப் பரவும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனால் அங்கு தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள், தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வார்டை சுகாதாரமான முறையில் சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அங்குள்ள நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு ரத்து: திமுக அரசு மேல்முறையீடு செய்ய வைகோ வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.