புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே காரணியேந்தல் என்னுமிடத்தில் கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் ஆவுடையார்கோவிலிருந்து நாகுடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, காரணியேந்தல் என்னுமிடத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் நிலைதடுமாறி தலைகீழாக பள்ளத்தில் விழுந்தது.
இதில், இருவர் வாகனத்தில் சிக்கிக்கொண்டு, படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சுயமரியாதை இல்லாத தமிழ்நாடு அரசு - கே.எஸ்.அழகிரி தாக்கு