வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி உரங்கள் விற்பனை செய்யவும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யாமல் நிர்ணயம் செய்த விலைக்கு விற்பனை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில் வேளாண் துறை கூடுதல் இயக்குநர் சுப்பையா (ஆராய்ச்சி) ஆய்வு செய்து உர இருப்பு மற்றும் உர விற்பனை கருவிகளின் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் மேலும் உரங்கள் உரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்ட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுகிறதா, கடைகளில் விலைப்பட்டியல் மற்றும் விற்பனை கருவிகளின் மூலம் விற்பனை செய்யப்படுறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடுமியான்மலை மத்திய கட்டுப்பாடு ஆய்வகத்தில் செயல்பட்டு வரும் நுண்ணூட்ட உரக்கலவை மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சுகாதார முறைப்படி பணி செய்கிறார்களா மற்றும் பணி நடைபெறுகிறதா என்றும் மண் பரிசோதனை நிலையம், உரம் விற்பனை நிலையம், உயிர் உரம் உற்பத்தி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.