ETV Bharat / state

பள்ளிக்கு தெரியாமல் சுற்றுலா.. லேபில் வைத்து பாலியல் தொல்லை.. அரசு பள்ளி ஆசிரியரின் கொடூரம்! - ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்சோ
போக்சோ
author img

By

Published : Feb 13, 2023, 11:04 AM IST

புதுக்கோட்டை: அரசு பள்ளி ஒன்றில் வேதியியல் ஆய்வக அறையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை கண்ட மாணவர்கள், இது குறித்து பள்ளி நிர்வாகத்துடன் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் மூலம் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுல பிரியா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கடந்த மாதம் உதவி தலைமை ஆசிரியர் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல், மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை தனது சொந்த காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து, அதில் ஒரு அறையில் ஆசிரியரும் மற்றொரு அறையில் மாணவ-மாணவிகளையும் தங்க வைத்துள்ளார். பின்னர் அங்கு ஒரு மாணவியரிடம் ஆசிரியர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மாணவிகளை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த ஆசிரியர், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

சுற்றுலா சென்ற விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மாணவ-மாணவிகளை ஆசிரியர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒரு மாணவியிடம் மட்டும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வேதியியல் ஆய்வக அறையில் தனிமையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த புகார் பள்ளி நிர்வாகம் மூலம் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், உதவி தலைமை ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர் இவ்வாறு நடந்துக்கொண்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் நபர் யார்? - கோவையில் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.