ETV Bharat / state

தனியார் பள்ளிகளுக்கு சவால்! டங் ட்விஸ்டர் முறையில் ஆங்கிலத்தில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்! - புதுக்கோட்டை மாவட்ட செய்தி

திருமணஞ்சேரி அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில சொற்களை டங் ட்விஸ்டர் முறையில் தெள்ளத் தெளிவாக பேசி அசத்தியும், கடினமான வார்த்தை மற்றும் வாக்கியங்களை மிக வேகமாகவும் துல்லியமாகவும் பேசுவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 22, 2023, 11:53 AM IST

டங் ட்விஸ்டர் முறையில் தெளிவான ஆங்கிலம் பேசி தனியார் பள்ளிகளை தூக்கி சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள்!!

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி என்னும் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப் பள்ளியில் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2012-13ஆம் கல்வி ஆண்டில் உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 2020-21ஆம் கல்வி ஆண்டு வரை 9 ஆண்டுகளாக இப்பள்ளியில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக ஆங்கில பாடத்தில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். மேலும் இந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவில் ஆங்கிலத்தில் பேசி அசத்தி வருகின்றனர். மேலும் அதோடு மட்டுமின்றி கடினமான ஆங்கில சொற்களை டங் ட்விஸ்டர் (tongue twister) முறையில் தெள்ளத் தெளிவாக பேசும் திறனை பெற்று தனியார் பள்ளி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

மேலும் இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக டைய்ட்டஸ் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதால் கடினமான வாக்கியங்களை கூட எளிமையாக உச்சரித்து திருமணஞ்சேரி அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அசத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களையும் மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் சொல்லி அனைவரையும் வியக்க வைத்து வருகின்றனர். அரசு பள்ளியில் சேர்த்தால் நமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவார்களா என்ற எண்ணம் பெற்றோர்கள் தோன்றுவது உண்டு.

ஆனால் இந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கே சவால் விடும் வகையில் திறன்பட பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு திருமணஞ்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொக்கிஷமாக் விளங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடமைக்கு பணி செய்யாமல் திருமணஞ்சேரி உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் டைய்ட்டஸை போல் மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

அவ்வாறு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி கொடுத்தால் வரக்கூடிய காலங்களில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்படும். இவ்வாறு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்சத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவு என்ற கருத்தை உடைத்து நாட்டிலேயே சிறந்த பள்ளிகளுக்கு உதாரணமாக அரசு பள்ளிகள் என்று போற்றப்படும் வகையில் மாறும் என்பது அனைவரது நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: Vengaivayal Case: இறுதி கட்டத்தை நெருங்கிய வேங்கைவயல் வழக்கு.. காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.