ETV Bharat / state

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் - காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவி

மாயனூர் கதவணை அருகே குளிக்க சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகள் நான்கு பேர் படங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தி, நான்கு பேர் குடும்பத்தினருக்கு உதவி தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும் அவர்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்து தங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

girl students who drowned in Cauvery river Minister Meyyanathan expressed his condolences to the families
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் தெரிவித்தார்
author img

By

Published : Feb 17, 2023, 10:56 PM IST

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் தெரிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த தமிழரசி(14), சோபியா (13), இனியா(12), லாவண்யா (12) ஆகிய நான்கு மாணவிகள் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் விளையாட சென்று விட்டு திரும்பும் வழியில், மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினரை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உயிரிழந்த மாணவிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் நான்கு மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்கினார். ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தலா இரண்டு லட்ச ரூபாய் வீதம் ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “கிராமப் பள்ளியில் படித்த உயிரிழந்த மாணவிகள் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக மாற வேண்டிய சூழலில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து மிகவும் வேதனையானது. மாணவிகளின் உயிரிழப்பு குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத ஒன்று.

குழந்தைகளின் இந்த இறப்பு செய்தி கேட்டு தமிழக முதல்வர் மிகவும் துயரம் அடைந்தார். மாவட்ட அமைச்சர்களாகிய எங்களை என்றும் அந்த குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குடும்பத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்துள்ளனர், அந்த மனுக்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று குடும்பத்திற்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும். பெற்ற பிள்ளையை பறிகொடுத்த இந்த குடும்பத்தினருக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்” என்றார்.

இதையும் படிங்க: கர்நாடகா இந்தியாவின் ஒரு பகுதி தான், பாகிஸ்தான் எல்லை இல்லை - அன்புமணி ராமதாஸ் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.