ETV Bharat / state

இடத்தகராறில் முன்விரோதம்: தந்தையும் மகனையும் படுகொலை செய்த முன்னாள் கவுன்சிலர் - Pudhukottai

புதுக்கோட்டை: களமாவூர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி மற்றும் அவரது மகனையும் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகவுள்ள முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை
author img

By

Published : Feb 6, 2019, 4:39 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி, அவரது மகன் முத்து ஆகிய இருவரும் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்து சில இடங்களை யாரிடமும் அனுமதி பெறாமல் விற்றதாக, அதனை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தன்னைக் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது எனவும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் முத்து மற்றும் அவரது தந்தை வீராசாமி தங்களது தொழிலை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த மூர்த்தி அவர்கள் இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் பேச வேண்டும் எனக்கூறி இன்று (பிப்.6) காலை கீரனுாரில் உள்ள அவரது தோப்பிற்கு வரவழைத்துள்ளார்.

தோப்பிற்கு வந்த அவர்கள் இருவரும் பேசத் தொடங்கும்போதே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முதலில் வீராசாமியை மூர்த்தி வெட்டினார். அதையடுத்து தப்பமுயன்ற அவரது மகனையும் அரிவாளால் அவர் வெட்டினார். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அளித்த தகவலின் பேரில் மாத்தூர் காவல் அதிகாரிகள் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இருவரின் உடலையும் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடத்தகறாரில் அப்பா மகன் இருவரையும் வெட்டிக் கொன்ற  முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்..

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மற்றும் அவருடைய மகன் முத்து அதே பகுதியை சேர்ந்தவர்  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு.மூர்த்தி. வீராசாமி மற்றும் அவருடைய மகனான முத்து இருவரும் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர் இதில் சில இடங்களை யாரிடமும் அனுமதி பெறாமல் முத்து என்பவர் விற்றதாக முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி தன்னைக் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது என கண்டித்துள்ளார். அதனையும் பொருட்படுத்தாமல் தனது வேலைகளை செய்து வந்தார் முத்து மற்றும் அவரது தந்தை வீராசாமி. கோபமடைந்த மூர்த்தி இதையடுத்து இன்று காலை கீரனூரில் உள்ள மூர்த்தியின் தோப்பிற்கு பேச வேண்டும் என வீராசாமியும் முத்துவையும் அழைத்துள்ளார் பேசத் தொடங்கும்போதே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் வீராசாமியை வெட்டினார். அதையடுத்து தப்பி ஓட முயன்ற அவரது மகனையும் அரிவாளால் வெட்டினார் இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் மாத்தூர் காவல் அதிகாரிகள் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து மூர்த்தியை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் உடலையும் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.