புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக முறையாகப் பருவமழை பெய்யாததால் விவசாயம் பொய்த்துப்போனது. இந்நிலையில் இந்தாண்டு பெய்த பருவமழையால் இங்கு நெல் உள்ளிட்டவைகளின் விவசாயம் செய்யப்பட்டது.
இதனிடையே இந்த விவசாயப் பயிர்களை ஆனைக்கொம்பன், புகையான், குலைநோய், எடைபழம் என்னும் மஞ்சள்புஞ்சை எனப் பல்வேறு நோய்கள் தாக்கியுள்ளன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனைதெரிவிக்கின்றனர். மேலும், பயிர்களின் பாதிப்புநிலை குறித்து வேளாண் துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் பார்வையிட்டு அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.