ETV Bharat / state

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நாளிதழ்களில் வந்த செய்தி தவறானது - திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் மறுப்பு!

புதுக்கோட்டை: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தினசரி நாளிதழ்களில் வந்த செய்தி முற்றிலும் தவறானது என திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தினசரி நாளிதழில் வந்த செய்தி முற்றிலும் தவறானது என திமுக ஒன்றியகுழு உறுப்பினர் மறுப்பு

author img

By

Published : Aug 10, 2020, 10:05 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த பொன்பேத்தி திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் என்பவர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதால் மீமிசல் காவல் துறையினர், அவரைக் கைது செய்ததாக சில தினசரி நாளிதழ்களில் செய்தி வெளிவந்தது. இந்தச் செய்தி முற்றிலும் பொய் என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் கூறுகையில்; 'கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக எனக்குச் சொந்தமான தென்னை மரத்தோப்பில், நான் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும்; அந்த தகவல் அறிந்து அங்கு மீமிசல் காவல் துறையினர் கைது செய்ததாகவும் சில நாளேடுகளில் செய்தி வெளிவந்துள்ளன. இச்செய்தி முற்றிலும் தவறானது. பொய்யான செய்தியாகும். இதுகுறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று நான் விசாரித்தபோது சம்பவம் நடந்த இடத்தைத் தான் குறிப்பிட்டுள்ளோம். உங்கள் மீது வழக்கு ஏதும் பதியவில்லை எனக் கூறினார்கள்.

சிலர் என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, வீண்பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்துவதற்காக, இந்தச் செயலில் நான் ஈடுபட்டதாக பொய் வழக்குப் பதிந்து, எனக்கும் நான் சார்ந்து இருக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தியுள்ளனர்.

சூதாட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது தான் உண்மை. நாளேடுகளில் வந்த செய்தி முற்றிலும் பொய்யான செய்தி" எனக் கூறினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.