ETV Bharat / state

பயன்படாத பொருட்களை வைத்து கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய மாணவர்கள்! - பயன்படாத பொருட்களை வைத்து கைவினைப்பொருட்கள் செய்த பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை: பிருந்தாவனம் அருகே உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் பயன்படாத பொருட்களை கொண்டு கைவினைப்பொருட்கள் செய்து பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

பயன்படாத பொருட்களை வைத்து செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள்

author img

By

Published : Nov 27, 2019, 5:28 PM IST

Updated : Nov 27, 2019, 7:05 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் டவுன்ஹால் அருகே உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக வளாகத்தில் அரசு உயர் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1958ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி அப்போதே, 5ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்புவரை தரம் உயர்த்தப்பட்டது. நடுநிலைப் பள்ளி என்ற பெயர் வைப்பதற்கு முன்பாகவே, தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர் துவக்கப்பள்ளி என்று பெயர் வைத்துள்ளனர்.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மலிவான மற்றும் பயன்படாத பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயாரித்து அதனை கண்காட்சியில் பார்வைக்காக வைத்தனர்.

பயன்படாத பொருட்களை வைத்து செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள்
பயன்படாத பொருட்களை வைத்து செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள்

இது குறித்து மாணவர்கள் தெரிவித்ததாவது, நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் தவிர நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் தூக்கி வீசுகிறோம் இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நாங்கள் இந்த கைவினைப்பொருட்களை மண், உப்பு,பழைய செய்தித்தாள், கோலப்பொடி, பழைய அட்டை, நெகிழிப்பை, உல்லன் நூல், பழைய காகிதம் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்தோம், இதற்கு எங்களது ஆசிரியர் பயிற்சியளித்து மிகவும் துணைபுரிந்தார். என்று கூறினர்.

இது குறித்து பள்ளியின் ஆசிரியர் கூறியதாவது, தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியும் திகழ்கிறது என்பதை வெளிகாட்டும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே ஒரு தன்னம்பிக்கை உருவாகும். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் படிப்பது மேல் என்ற எண்ணம் அவர்களிடம் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய மாணவர்கள்

மேலும், சிறந்த மாணவர்களாக திகழ்பவர்களுக்கு எல்ஐசி நிறுவனத்திலிருந்து விருதுகளும் வழங்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டு அரசுப் பள்ளியான எங்களது பள்ளியில் நிறைய மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அரசுப் பள்ளியை ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம் என்று தெரிவித்தார்

இதையும் படிங்க: அரசுப் பள்ளி வளாகத்தில் 520 மரக்கன்றுகளை நட்ட முன்னாள் மாணவர்கள்..!

Intro:Body:மலிவான மற்றும் பயன்படாத பொருட்களில் கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.

புதுக்கோட்டை மாவட்ட பிருந்தாவனம் அருகே உள்ள அரசு உயர்துவக்கப்பள்ளியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதில் ஒரு பகுதியாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் மலிவான மற்றும் பயன்படாத பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயார் செய்து கண்காட்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சி கண்போரைக் கவர்ந்தது.

இது குறித்து மாணவ மாணவிகள் தெரிவித்ததாவது,
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் தவிர நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம் இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நாங்கள் செய்திருக்கும் இந்த கைவினைப்பொருட்கள் மண்,உப்பு ,பழைய செய்தித்தாள், கோலப்பொடி பழைய அட்டை, பாலிதீன் பை, உள்ளன் நூல், பழைய காகிதம் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்தோம் எங்களுக்கு எங்களது பயிற்சி ஆசிரியர் மிகவும் துணைபுரிந்தார். என்று கூறினர்.

இது குறித்து பள்ளியின் ஆசிரியர் கூறியதாவது,

தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியும் திகழ்கிறது என்ற விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே ஒரு தன்னம்பிக்கை உருவாகும். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் படிப்பது மேல் என்ற எண்ணம் அவர்களிடம் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழியில் சிறந்த மாணவர்களாக திகழ்பவர்களுக்கு எல்ஐசி நிறுவனத்திலிருந்து விருதுகளும் வழங்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டு அரசு பள்ளியான எங்களது பள்ளியில் நிறைய மாணவர் சேர்க்கை வந்துள்ளது. அரசு பள்ளியை ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். என்று தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Nov 27, 2019, 7:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.